திருத்தங்கலில் ஆசிரியர் திட்டியதால் மகள் தற்கொலை செய்ததாக தந்தை தகவல்
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் 10 வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி, ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ராஜ் தெரிவித்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி திருப்பதி நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் ராஜ் மகன் திவ்யதர்ஷினி 15. இவர் அங்குள்ள எஸ் என்.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை ராஜ் கூறுகையில், எனது மகளை ஆசிரியர் அடிக்கடி திட்டியுள்ளார். மேலும் அவரை மட்டும் வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இது குறித்து எனது மகள் என்னிடம் கூறி இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றார்.
பத்தாம் வகுப்பில் வேறு பள்ளியில் சேர்க்க முடியாது எனவே தொடர்ந்து அங்கேயே படி என்று கூறியிருந்தேன். இந்நிலையில் மீண்டும் ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், என்றார்.
சிவகாசி டி.எஸ்.பி., தனஜெயன் கூறுகையில், பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் விசாரிக்கையில், தவறு செய்த மாணவர்களை எவ்வாறு சாதாரணமாக திட்டுவோமோ அதேபோலத்தான் இந்த மாணவியும் கண்டிக்கப்பட்டார்.
மற்றபடி கடினமாக திட்டவில்லை என்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!