பா.ஜ.,வினரை இழுக்க திட்டம்: முன்னாள்களுக்கு காங்., வலை
தாவணகெரே: லோக்சபா தேர்தலில், தாவணகெரே தொகுதியில், வெற்றி பெறுவதற்காக, மூன்று முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு, காங்கிரஸ் வலை விரித்து உள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனுார் சிவசங்கரப்பா. தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்தவர். அகில பாரத லிங்காயத் சமூகத்தின் தலைவராகவும் உள்ளார்.
ஆனால், தாவணகெரே லோக்சபா தொகுதியில், இவரது செல்வாக்கை பயன்படுத்தி, காங்கிரசால் வெற்றி பெற முடியவில்லை. சாமனுார் சிவசங்கரப்பாவின் மருமகனான பா.ஜ.,வின் சித்தேஸ்வர் தொடர்ந்து, வெற்றி பெற்று வருகிறார்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தாவணகெரே தொகுதியில் வெற்றி பெற, துணை முதல்வர் சிவகுமார் வியூகம் வகுத்து வருகிறார்.
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரேணுகாச்சார்யா, குருசித்தனகவுடா, மாடால் விருபாக் ஷப்பாவுக்கு வலை விரித்து உள்ளார்.
ரேணுகாச்சார்யாவை சேர்க்க, தாவணகெரே மாவட்ட காங்கிரசில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மற்ற இருவருக்கும் எதிர்ப்பு இல்லை. மாடால் விருபாக் ஷப்பா லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டாலும், தாவணகெரேயில் பிரபல தலைவராக வலம் வருகிறார். இதனால் அவரை இழுக்கும் முயற்சியில், காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!