மாநில தேனீ வளர்ப்பு பயிற்சி துவக்க விழா
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில், விருதுநகர்,தேனி வாரியம் புதுடில்லி இணைந்து நடத்தும் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி துவக்க விழா நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியாரம்மாள் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை கூறினார். தோட்டக்கலை துணை இயக்குனர் கார்த்திக் தேனீ வளர்ப்பில் அரசு துறை திட்டங்கள் குறித்து பேசினார்.
பேராசிரியர் உஷாராணி தேனீக்களின் வகைகளைப் பற்றி கூறினார். பேராசிரியர் வேணுதேவன் பயிர் மகசூல் அதிகரிப்பு பற்றி விளக்கம் அளித்தார். பேராசிரியர் நல்ல குறும்பன் தேனில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பற்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!