கருப்பசாமி கோயில் திருவிழா
காரியாபட்டி : காரியாபட்டி மேலத் துலுக்கன்குளத்தில் பாலநாகம்மாள், கார்மேக கள்ளழகர் கருப்பசாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பூஜை பெட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்துச் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பக்தர்கள் 20 அடி நீளம் வேல்குத்தி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது. முளைப்பாரி எடுத்து பெண்கள்ஊர்வலமாக சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!