ADVERTISEMENT
ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே டில்லியில் பல்வேறு நாடுகளின் துாதர்களை சந்தித்து நவம்பரில் நடக்க உள்ள பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, நவம்பரில் பெங்., அரண்மனை மைதானத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களுடன் முதல்வர் சித்தராமையா, ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையில், அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று டில்லி சென்றார். அங்கு, ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளின் துாதர்கள், உயர் அதிகாரிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டிற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தார்.
பின், பிரியங்க் கார்கே கூறியதாவது:
தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. வரவிருக்கும் தொழில்நுட்ப உச்சிமாநாட்டில், உலகின் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளின் பிரதிநிதிகள் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிக பெரிய வாய்ப்பாக அமையும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!