ADVERTISEMENT
மூணாறு : மூணாறு அருகே மாங்குளத்தில் பெட்ரோல் ஊற்றி வீட்டை தீ வைத்து எரித்த போபிவர்க்கீசை 45, போலீசார் கைது செய்தனர்.
மூணாறு அருகே மாங்குளத்தைச் சேர்ந்தவர் பால்சன்ஜோசப். இவர் வேலை தொடர்பாக கோதமங்கலத்தில் மனைவியுடன் வசிக்கிறார். அதனால் மாங்குளத்தில் உள்ள வீடு பூட்டிய நிலையில் இருந்தது. அந்த வீடு செப்.13 இரவில் தீப்பற்றி எரிந்து சேதமானது.அது குறித்து மூணாறு போலீசார் விசாரித்தனர். அதில் போபிவர்க்கீஸ் வீட்டை தீ வைத்து எரித்தாக தெரிய வந்தது. அவரை மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பால்சன்ஜோசப், போபிவர்க்கீஸ் இடையே முன்பகை இருந்து வந்தது. சம்பவத்தன்று பால்சன்ஜோசப் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த போபிவர்க்கீஸ் ஒவ்வொரு அறையிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார் என தெரியவந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!