விளாங்குடி அ.தி.மு.க., கவுன்சிலர் மறியல்
மதுரை, : மதுரை விளாங்குடியில் நேற்று அ.தி.மு.க., நகர் மாவட்டம் சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மக்களுக்கு இடையூறாக இருந்ததாக கூறி மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் அகற்றினர்.
இதை கண்டித்து அந்த வார்டு கவுன்சிலர் நாகஜோதி தலைமையில் அப்பகுதியினர் விளாங்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட, ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!