Load Image
Advertisement

கோலார் தொகுதியை தக்க வைப்பாரா முனிசாமி?

 Will Munisamy retain the Kolar constituency?    கோலார் தொகுதியை தக்க வைப்பாரா முனிசாமி?
ADVERTISEMENT
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு பின் கோலார் லோக்சபா தொகுதியில், பா.ஜ., - எம்.பி.,முனிசாமியின் செயல்பாடுகள் விறுவிறுப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோலார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபைத் தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறாமல் பூஜ்யம் ஆனதால், கட்சி நடவடிக்கைகள் மந்தமாகவே உள்ளன. எம்.பி., முனிசாமியுடன், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும், மண்டல தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரியவில்லை.

இவருக்கு பக்கபலமாக மாவட்ட பா.ஜ., தலைவர் டாக்டர் வேணுகோபால் மட்டுமே நிற்கிறார். மற்ற பிரமுகர்களை தேட வேண்டி உள்ளது. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.

மீண்டும் பா.ஜ., தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், களம் காண வேண்டிய முனிசாமி எம்.பி., மவுனமாக இருக்கின்றார் என எட்டு தொகுதிகளிலும் அதிருப்தி நிலவுகிறது.

கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சராக பைரதி சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இருமுறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோலார் மாவட்ட சட்டசபைத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள் ஆப்சென்ட் இல்லாமல் பங்கேற்றனர். ஆனால், முனிசாமி எம்.பி., மட்டும் பங்கேற்கவில்லை.

மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியவர் மவுனமாக இருப்பது கோலார் மாவட்ட பா.ஜ.,வில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

சீனிவாசப்பூர் தொகுதியில் வன பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை சர்வே செய்து அகற்ற அரசு நடவடிக்கை எடுத்த போது, அரசுக்கு எதிராக எம்.பி., முனிசாமி தலைமையில் விவசாயிகளை கொண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், சீனிவாசப்பூர் பா.ஜ., தலைவர் நாராயணசாமி கூட பங்கேற்கவில்லை.

'கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை முனிசாமி கவனிக்க தவறுகிறார்' என்று கோலார் மாவட்ட பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

கர்நாடக மாநில அரசுக்கு எதிராக பா.ஜ., தலைவர்கள் முல்பாகல் குருடு மலையில் சுற்றுப் பயணத்தை துவக்கிய நிகழ்ச்சியில், முல்பாகல் பா.ஜ., நிர்வாகிகள் பலரை காணவில்லை.

மாவட்ட முக்கிய பிரமுகர்களும் அங்கு வரவில்லை.

எனவே, 'கட்சியின் அடிமட்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வேலையை முனிசாமி துவங்கினால் மட்டுமே, தொகுதியை தக்கவைக்க முடியும்' என, பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement