தேவிகுளம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின
மூணாறு, : தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின.
தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 2020 முதல் 2022 வரையான கால அளவில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் 13 வார்டுகளுக்கு 36 ஹைமாக்ஸ் விளக்குகள் வாங்கியதிலும், அமைத்ததிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக இடுக்கி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஷாஜூ ஜோஸ் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் டிப்ஷன்ஜோசப் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடந்தது.
அதில் பல வார்டுகளில் ஹைமாக்ஸ் விளக்குகள் பொருத்தப்படவில்லை என தெரிய வந்தது. தவிர பல்வேறு முக்கிய ஆவணங்களும் சிக்கின. அது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!