ADVERTISEMENT
கூடலுார், குடிநீர் மெயின் குழாய் மீது பாலம் அமைக்கப்பட்டதால் உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான மெயின் குழாய் கூடலுார் வழியாக செல்கிறது. ரோடு விரிவாக்க பணிக்காக கூலிக்காரன் ஓடையில் உள்ள பாலம் அகலப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அகலப்படுத்தும் போது குடிநீர் மெயின் குழாய் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வால் மெயின் குழாய் உடையும் ஆபத்து உள்ளது. அதனால் மெயின் குழாயை மாற்றி அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் முன் வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!