Load Image
Advertisement

ரூ.16 லட்சம் மதிப்பு இ - சிகரெட் பறிமுதல் 

 E-Cigarettes worth Rs.16 lakh seized    ரூ.16 லட்சம் மதிப்பு இ - சிகரெட் பறிமுதல் 
ADVERTISEMENT


தேவனஹள்ளி : மலேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 15.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இ - சிகரெட்டுகள் பெங்களூரு விமான நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் மலேஷியாவில் இருந்து, சரக்கு விமானம் வந்தது.

அந்த விமானத்தில் இ - சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சரக்கு முனையத்தில், அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மலேஷியாவில் இருந்து வந்த, பார்சல்களை பிரித்து பார்த்த போது, ஒரு பெரிய அட்டை பெட்டியில் 1,590 இ - சிகரெட்டுகள் இருந்தன.

அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு 15.90 லட்சம் ரூபாய் ஆகும். இ - சிகரெட்டுகளை ஆர்டர் செய்தவர் யார் என்று, விசாரணை நடக்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement