விளக்கு பூஜை
சோழவந்தான் : வாடிப்பட்டி ஒன்றியம் நெடுங்குளம் விநாயகர் கோயிலில் சதுர்த்தி உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை சிலை பிரதிஷ்டை, பூஜையுடன் துவங்கியது. மாலை நடந்த 108 விளக்கு பூஜையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி துவக்கி வைத்தார். சக்தி கார்த்தி குழுவினரின் கிராமிய கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது. விநாயகர் ஊர்வலத்தை குட்லாடம்பட்டி ரமண ஆசிரம சுவாமி ரமண பிரசாதனந்தகிரி துவக்கி வைத்தார். அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து குளத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!