ADVERTISEMENT
சோழவந்தான் : மதுரை மேலக்கால் ரோடு தாராப்பட்டி விலக்கில் கிராம மக்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கட்டியிருந்த கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தார். பின் நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு வந்த இன்ஸ்பெக்டர், ஸ்பீக்கர்களை கீழே தள்ளி சேதப்படுத்தியதுடன், விநாயகர் சிலை முன்பு துாங்கிய சிறுவர்கள், இளைஞர்களை தாக்கியுள்ளார்.
இதனை தடுத்த பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கண்டித்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 9:30 மணி முதல் 10:00 மணி வரை மறியல் செய்தனர்.
இதனால் மதுரை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. சமயநல்லுார் டி.எஸ்.பி., பாலசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!