மண்டல குறைதீர் கூட்டம்
திருப்பரங்குன்றம் : மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை வகித்தார். கமிஷனர் பிரவீன்குமார், மண்டல தலைவர் சுவிதா முன்னிலை வகித்தனர். அடிப்படை வசதிகள், பாதாள சாக்கடை வசதி கேட்டு மக்கள் மனு கொடுத்தனர். சுரங்கப்பாதையில் மழைநீர் கழிவு நீர் தேங்கி நிற்பதை மேயர், கமிஷனர், மண்டல தலைவர் பார்வையிட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!