வாலிபர் கொலை மூன்று பேர் சரண்
சம்பிகேஹள்ளி, : கடன் பிரச்னையில் வாலிபரை கொலை செய்த, நண்பர் உட்பட மூன்று பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
பெங்களூரு சம்பிகேஹள்ளி அர்க்காவதி லே - அவுட்டில் வசித்தவர் பரூக்கான், 24. இவரிடம் இருந்து நண்பரான சுஹைல், 24 என்பவர், 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் திரும்ப தரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுஹைலின் மொபைல் போனை பரூக்கான் பறித்து சென்றார்.
மொபைல் போனில் அம்மாவின் புகைப்படம் உள்ளது. இதனால் திரும்பி தரும்படி சுஹைல் கேட்டார். ஆனால் பரூக்கான் செல்போனை கொடுக்க மறுத்தார். நேற்று முன்தினம் சுஹைல், அவரது நண்பர்கள் முபாரக், 24, அக்ரம் அலி, 24 ஆகியோர், பரூக்கானிடம் இருந்து, மொபைலை பறிக்க முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், பரூக்கானை கத்தியால் குத்தி மூன்று பேரும், கொலை செய்துவிட்டு தப்பினர்.
நேற்று மதியம் சம்பிகேஹள்ளி போலீசில், சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!