Load Image
Advertisement

வண்ணத்துப்பூச்சியின் 200 நாள் வாழ்க்கை கணக்கெடுப்பில் ஆச்சரிய தகவல்



மதுரை, : 'ஒரு வண்ணத்துப்பூச்சியின் கூட்டுப்புழு வாழ்க்கை முதல் முதிர்ந்த நிலைவரை 30 முதல் 200 நாட்கள் வரை உயிர் வாழும்'' என மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முதல்வர்ராஜேந்திரன் துவக்கி வைத்தார். கல்லுாரி வளாகத்தில் கடந்த ஆண்டு 24 வகை வண்ணத்துப்பூச்சி இருந்த நிலையில்தற்போது23 வண்ணத்துப்பூச்சிகளே கணக்கெடுக்கப்பட்டன.

அமெரிக்கன் கல்லுாரி விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ் பேசியதாவது: தேனீகளுக்கு அடுத்து மகரந்த சேர்க்கையில் முக்கிய பங்குவகிப்பவை வண்ணத்துப்பூச்சிகளே.

தற்போது அழியும் தருவாயில் உள்ளன. வண்ணத்துப்பூச்சிகள் 28, 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் வெளியே வருகின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சியின் கூட்டுப்புழு வாழ்க்கை முதல் முதிர்ந்த நிலைவரை 30 முதல் 200 நாட்கள் வரை உயிர் வாழும்.

முதிர்ந்த நிலையில் இரண்டு நாட்களே உயிர் வாழும். மண்ணில் உட்கார்ந்து அதில் இருந்தும் தனிமங்களை பெற்றுக்கொள்ளும்.

'இந்தியன் பட்டர்பிளைஸ்' இணையதள தகவல்படி, தமிழகத்தில் 325 உட்பட இந்தியாவில் மொத்தம் 1328 இனங்கள் உள்ளன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விபரங்களை இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். வண்ணப்பூச்சிகளை பாதுகாக்க வேண்டியது நாம் அனைவரின்கடமை. இல்லையெனில் அரிய வகைகள் அழிந்து விடும், என்றார்.

பேராசிரியர்கள் முரளி, பழனிவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement