மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
பங்கார்பேட்டை, : பங்கார்பேட்டை அருகே உள்ள தம்மேன ஹள்ளியைச் சேர்ந்த பிரஜ்வல், 16 என்பவர் பெங்கனுார் கிராமத்துக்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு நள்ளிரவில், மின் கம்பம் அருகில், மின் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.
அதிகாலையில் சிறுநீர் கழிக்க சென்ற பிரஜ்வல், கீழே விழுந்திருந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!