விரிவுரையாளரிடம் நகை பறிப்பு
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி தமிழ் விரிவுரையாளர் கவிதா 49. வாலாந்துாரில் வசிக்கிறார். நேற்று காலை டூவீலரில் கல்லுாரிக்கு புறப்பட்டார். ஆரியபட்டி அருகே பின்னால் டூவீலரில் வந்த 30 வயதுள்ள இருவர், கவிதாவின் டூவீலரை இடித்து கீழே தள்ளி விட்டு கழுத்தில் இருந்த ஐந்தே முக்கால் பவுன் தங்கச் செயினை பறித்தனர். அவர்களுடன் கவிதா போராடியதில் இரண்டரை பவுன் மதிப்புள்ள செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!