ADVERTISEMENT
யஷ்வந்த்பூர், : யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணியில், கிழக்கு பகுதியில் முதல் பிளாட்பார்ம் அருகில் மல்டிலெவல் கார் பார்க்கிங், வருகை, புறப்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தை, 380 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணியை, 2022ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வாகனங்கள் வந்து, செல்ல தனி பகுதி அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். அத்துடன், 14,800 சதுர மீட்டர் அளவில், விமான நிலையம் போன்று முனையம் அமைக்கப்படும்.
இங்கு உணவகங்கள், சில்லறை கடைகள், ஓய்வறை உட்பட வர்த்தக மையங்கள் அமைக்கப்படும். மழைநீர் சேமிப்பு, சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படும். இயற்கையான வெளிச்சம் வரும் வகையிலும் கட்டப்படும். எல்.இ.டி., விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
சீரமைப்பு பணியின் முதல் கட்டமாக, ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும் பணிகள் துவங்கி உள்ளது.
கடந்த, 2025 ஜூலைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க, டெண்டர் எடுத்த டில்லியை சேர்ந்த கிரிதர் லால் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது.
மல்டிலெவல் பார்க்கிங் 6,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.
இங்கு, 90 இரு சக்கர வாகனங்கள், 90 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். அத்துடன் மேற்கு பகுதியில், 1,200 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது. 35 நான்கு சக்கர வாகனங்கள் அல்லது 70 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!