Load Image
Advertisement

திருச்சுழியில் பழமையான வருணன் சிற்பம் கண்டுபிடிப்பு

 Ancient sculpture of Varuna discovered in Thiruchuzhi    திருச்சுழியில் பழமையான வருணன் சிற்பம் கண்டுபிடிப்பு
ADVERTISEMENT


திருச்சுழி : திருச்சுழி அருகே கண்மாயில் பழமையான வருணன் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

திருச்சுழி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் உள்ள கண்மாயில் பழமையான குமிழித்தூண் உள்ளது. இதை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் கள ஆய்வு செய்து கூறியதாவது:

தூணின் உயரம் 15 அடி. இதில் பெரியதாக வருணன் சிற்பம் உள்ளது. இவர் மழைக்கு அதிபதி ஆவார். அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவர். மேற்கு திசைக்கு உரியவராக உள்ள இவரின் வாகனம் முதலை. இவரது மனைவியின் பெயர் வாருணி, வருண பகவானை வழிபடும் போது தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்கிறது என்பது ஆண்டாண்டு காலமாக மக்களின் நம்பிக்கை.

இந்தச் சிற்பத்தின் உயரம் 3 அடி ஆகும். சிற்பத்தில் வருண பகவான் 4 கரங்களோடு உள்ளார். வலது முன் கரத்தை அபய ஹஸ்தத்திலும், வலது மேற்கரத்தில் வஜ்ரமும், இடது மேல் கரத்தில் சூலமும், இடது கீழ்கரம் வரஹஸ்தத்திலும் உள்ளபடி காட்சி தருகிறார்.

தலையில் மகுடம் கரண்ட மகுடம், மகுடத்திற்கு மேல் பூந்தோரணம், கழுத்தில் ஆபரணங்கள் உள்ளன. இடுப்பில் உதிர பங்தம், இரண்டு கால்களிலும் தண்டை அணிந்து உள்ளார். ஒரு பீடத்தில் சுகாசன கோலத்தில் அமர்ந்துள்ளார்.

நமது முன்னோர்கள் அஷ்டதிக் பாலகர்களை அவர்கள் எதற்கு அதிபதியோ அதற்கு ஏற்றார் போல் அந்தந்த இடங்களில் அவர்களின் சிற்பங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளனர். உலக்குடி கண்மாயில் நீருக்கு அதிபதியான வருணனின் சிற்பத்தை வடிவமைத்து வணங்கி வந்துள்ளனர். இவர் ஆண்டில் பெரும்பாலான நாட்களில் நீருக்குள் மூழ்கி இருப்பதால் அந்தப் பகுதியில் எப்பொழுதும் விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்துள்ளது.

ஆரம்ப காலங்களில் பாண்டிய மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். அதன் தொடர்ச்சியாக நாயக்கர் மன்னர்களும் அந்த வழியை பின்பற்றினர். அதற்கு சாட்சியாக உலக்குடி கிராமத்தில் இந்த குமிழ்த்தூண் உயர்ந்த கம்பீரமாக காட்சி தருகிறது. இதன் காலம் 17ம் நூற்றாண்டு ஆகும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement