1.53 லட்சம் விநாயகர் சிலைகள் பெங்களூரில் ஒரே நாளில் கரைப்பு
பெங்களூரு: பெங்களூரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1.53 லட்சம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் மட்டுமின்றி, ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். சிலர் ஒரு நாளும், இன்னும் சிலர் மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் வரை விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுகின்றனர். அந்த வகையில், பெங்களூரு நகரில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக, 39 ஏரிப் பகுதிகளில் தனி குளமும், 418 நடமாடும் தண்ணீர் டேங்க் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இதில், சதுர்த்தியின் முதல் நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 965 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மூன்றாவது நாளான இன்று இதன் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டல வாரியாக விபரம்
மண்டலம் சிலைகள்
கிழக்கு 25,193
மேற்கு 36,021
தெற்கு 59,840
பொம்மனஹள்ளி 7,438
தாசரஹள்ளி 1,191
மஹாதேவபுரா 5,878
ஆர்.ஆர்.நகர் 10,330
எலஹங்கா 7,960
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!