புலிப்பட்டியில் 53 மி.மீ., மழை
மதுரை : மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகளவாக புலிப்பட்டியில் 52.80 மி.மீ., மழை பெய்துள்ளது.
மதுரையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. அவ்வப்போது மழை பெய்தாலும் பெரும்பாலான நேரங்களில் கோடை காலத்தைப் போல வெயில் சுட்டெரிக்கிறது.
நேற்று முன்தினம் மாலை மதுரை பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.
மழையளவு விவரம் (மி.மீ.,): விமான நிலையம் 23.80, விரகனுார் 8.20, மதுரை வடக்கு 6.80, சிட்டம்பட்டி 25.20, இடையபட்டி 12.40, கள்ளந்திரி 3.20, தல்லாகுளம் 12.80, மேலுார் 19, தனியாமங்கலம் 12, மேட்டுப்பட்டி 2.40, கள்ளிக்குடி 4.80, திருமங்கலம் 22.40, பேரையூர் 11.60, எழுமலை 1.80, பெரியபட்டி 3.60.
நீர்மட்டம்
பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடி. (மொத்த உயரம் 152 அடி) அணையில் 2430 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 417 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.64 அடி. (மொத்தம் 71 அடி) அணையில் 1698 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 332 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 69 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 19.30 அடி. (மொத்த உயரம் 29 அடி) அணையில் 25.23 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!