ADVERTISEMENT
சிக்கபல்லாப்பூர், : குழந்தை பிறக்காததை காரணம் காட்டி, மாமியார் துரத்தியதால், பெட்டி, படுக்கையுடன் கணவர் வீட்டின் முன்பு, பெண் போராட்டம் நடத்தி வருகிறார்.
சிக்கபல்லாப்பூரை சேர்ந்தவர் முக்தியார் அகமது, 35, இவரது மனைவி ஜபீன் தாஜ், 33. கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை பிறக்கவில்லை.
இதை காரணமாக வைத்து கடந்த ஆறு ஆண்டுகளாக ஜபீன் தாஜுடன், அவரது மாமியார் நியாமதி பேகம் சண்டை போட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி விஜயபுராவில், வாடகை வீடு பார்த்த முக்தியார் அகமது, மனைவியுடன் வசித்தார். தாய் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், தாய் வீட்டிற்கு சென்றவர் அதன்பின்னர், மனைவியை பார்க்க வரவில்லை.
ஜபீன் தாஜ் மொபைல் போனில் அழைத்தாலும் எடுத்து பேசவும் இல்லை.
இதனால், நேற்று முன்தினம் பெட்டி, படுக்கையுடன் கணவர் வீட்டிற்கு ஜபீன் தாஜ் வந்தார். அவரை வாசலில் நிறுத்திய நியாமதி பேகம், வீட்டிற்குள் விடாமல் துரத்தி அடித்தார்.
பின், வீட்டை பூட்டிவிட்டு எங்கேயோ சென்று விட்டார். கணவர் வீட்டு வாசலில் பெட்டி, படுக்கையுடன் ஜபீன் தாஜ் போராட்டம் நடத்தி வருகிறார். 'எத்தனை நாட்கள் ஆனாலும், இங்கேயே இருப்பேன்' என்றும் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!