100 கிலோ இறைச்சி பறிமுதல்
சிவகங்கை,: சிவகங்கை உணவகங்களில் உணவுபாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆய்வு மேற்கொண்டனர். தொண்டி ரோடு, மதுரை ரோடு, திருப்புத்துார் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் சோதனை செய்யப்பட்டது. சிவகங்கை நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார். நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஆய்வாளர் தினேஷ்குமார் சோதனை செய்தனர்.
பழைய சவர்மா சிக்கன் 20 கிலோ, அதிகமான வண்ணம் சேர்த்த சிக்கன் 50 கிலோ, பழைய சிக்கன் 30 கிலோ, பழைய சாதம் 50 கிலோ உள்ளிட்டவை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததை பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர். கடை உரிமையாளரை உணவு பாதுபாகப்புதுறையினர் எச்சரித்து 3 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 5 கடைகளுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!