கம்பம், சின்னமனூரில் போலீஸ் சிசிடிவி கேமராக்கள் பழுது
கம்பம், : கம்பம், சின்னமனூரில் போலீசார் அமைத்த 'சிசிடிவி' கேமராக்கள் பழுதடைந்துள்ளது.
சமீபமாக சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு அதிக முக்கியத்வம் வாய்ந்ததாக மாறி வருகிறது.
குறிப்பாக கொள்ளை, திருட்டு வழக்குகளின் போலீசாரின் புலனாய்வுக்கு பெரிதும் உதவி வருகிறது. அனைத்து வழக்குகளிலும் போலீசாருக்கு கை கொடுப்பது சிசிடிவி கேமராக்களாகும்.
இதன் பயன்பாட்டால் கைரேகை, மோப்பநாய் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே,கடைக்காரர்கள், குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் போலீசார் கம்பம், சின்னமனூர் நகரங்களில் மெயின் ரோடு, கம்பமெட்டு ரோடு, பார்க் ரோடு சந்திப்பு, சீப்பாலக் கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் போலீசார் பொருத்தி உள்ளனர்.
ஆனால் பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. ஏதாவது பெரிய சம்பவங்கள் நடக்கும் போது தான் 'சிசிடிவி' கேமராக்களை பார்ப்பார்கள்.
பழுதடைந்த 'சிசிடிவி' கேமராக்களை பழுது நீக்கி, போலீசாருக்கு பயன்பட எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங் ரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!