ADVERTISEMENT
ஷிவமொகா : காதல் திருமணம் செய்த, ஏழு மாதத்தில் இளம்பெண் மர்மமாக இறந்தார். கணவர், மாமியாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஷிவமொகா தாலுகா ஹரிகே கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 25. ஷிவமொகா டவுன் சாரதா நகரில் வசித்தவர் நமீதா, 22. இவர்கள் இருவரும் காதலித்தனர். ஏழு மாதங்களுக்கு முன்பு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய் வீட்டிற்கு நமீதா வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, மாமியார் வீட்டிற்கு வந்த சதீஷ், நமீதாவை அவசர, அவசரமாக பைக்கில் ஏற்றிக்கொண்டு, ஹரிகே கிராமத்திற்கு அழைத்து சென்றார்.
சிறிது நேரத்தில் நமீதாவின் பெற்றோரிடம், மொபைல் போனில் பேசிய சதீஷ், நமீதா இறந்து விட்டதாகவும், அவரது உடல் ஷிவமொகா மெக்கான் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று, மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
நமீதா இறந்ததற்கான காரணத்தை சொல்லாமல், சதீஷ் மழுப்பினார். எப்படியோ மர்மமாக இறந்து விட்டார் என்றார்.
வரதட்சணை வாங்கி வர மறுத்ததால், நமீதாவை கொன்றதாக சதீஷ், அவரது தாய் கிரிஜம்மா மீது, நமீதாவின் பெற்றோர், ஷிவமொகா ரூரல் போலீசில் புகார் அளித்தனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!