அரசு பஸ் டிப்போவில் டயர் பற்றாக்குறை: சர்வீஸ் நிறுத்தம்
மூணாறு: மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போவில் டயர் பற்றாக்குறையால் பல்வேறு பகுதிகளுக்கு பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டன.
பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து தேனி, உடுமலைபேட்டை, பெங்களூரு உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கு 30 பஸ் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன.
சுற்றுலா பகுதி என்பதால் அரசு பஸ்கள் மூலம் டிப்போவுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் டயர் உள்பட உதிரிபாகங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
தற்போது டயர் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் எர்ணாகுளம், சூரிய நல்லி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்ட ஐந்து சர்வீஸ்களும், நேற்று மூன்று சர்வீஸ்களும் நிறுத்தப்பட்டன. அந்த வழித்தடங்களில் தலா ரூ.16 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது.
பஸ் சர்வீஸ்கள் நிறுத்தப்பட்டதால் டிப்போவுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் வழக்கமான பஸ் வசதி இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!