Load Image
Advertisement

ஆபாச படம், வீடியோ வெளியிட்டு ஆசிரியையை மிரட்டியவருக்கு வலை



சாம்ராஜ் நகர் : 'ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்' என்று, ஆசிரியையை மிரட்டிய முன்னாள் காதலன் உட்பட, இருவரை போலீஸ் தேடுகிறது.

சாம்ராஜ் நகர் டவுனை சேர்ந்தவர் அப்துல் அசீம், 27. இவரும் வேறு சமூகத்தை சேர்ந்த, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரும், ஏழு ஆண்டுகள் காதலித்தனர். காதலிக்கும் போது பல இடங்களுக்கு சென்றவர்கள், நெருக்கமாக புகைப்படம், வீடியோ எடுத்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆசிரியை, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில தினங்களாக ஆசிரியையிடம், அப்துல் அசீம் மொபைல் போனில் பேசியுள்ளார். கணவரை பிரிந்து தன்னுடன் வந்துவிடும்படி தொல்லை கொடுத்து உள்ளார்.

ஆனால், ஆசிரியை மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்தவர், கணவரை பிரிந்து என்னுடன் வராவிட்டால், நாம் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கும் ஆசிரியை பயப்படவில்லை.

கோபம் அடைந்த அப்துல் அசீம், தனது நண்பரான மயூர் என்பவருடன் சேர்ந்து, ஆசிரியையின் ஆபாச புகைப்படங்கள், வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறியதுடன், 10 லட்சம் ரூபாய் தரும்படி மிரட்டியும் உள்ளார்.

இதனால் அப்துல் அசீம், மயூர் மீது சாம்ராஜ் நகர் சைபர் கிரைம் போலீசில், நேற்று முன்தினம் ஆசிரியை புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement