தங்கவயல் செக்போஸ்ட்!
குறுக்கே நிற்கும் ஜாதி!
கை கட்சியின் கோலார் அசெம்பிளி காரருக்கு கோல்டு சிட்டியிலும் செல்வாக்கு இருக்குது என்பதை அவர் காண்பிக்க, ஒருவரின் திருமண விழாவில் கோல்டு நகரில் பேனர்கள் மூலம் காட்டினாங்க.
ஏற்கனவே, முல்பாகல் இவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அங்கு அசெம்பிளிக்கு தேர்வானார். இவரோட ஆதரவில் ஒருவரை வெற்றி பெற செய்து மந்திரியாவும் ஆக்கினாரு. இவருக்கு ப.பேட்டை, சீனிவாசப்பூரிலும் நட்பு வட்டார செல்வாக்கு இருக்குதாம். இவருக்கு ஜாதி பிரச்னை தான் வில்லனாக இருப்பதால் தனி தொகுதியில் போட்டியிட முடியாமல் போனதாம்.
அதனால் தான் கோலார் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு அசெம்பிளிக்கு தேர்வானாரு. லோக்சபா தேர்தலிலும் போட்டியிட ஜாதி பிரச்னை தான் இவருக்கு குறுக்கே நிற்குதாம். இதனால் இவருக்கு கோலார் லோக்சபா தொகுதியில் போட்டியிட முடியலயாம். இல்லாட்டி, இவரு இங்கிருந்தே செங்கோட்டை எகிறுவாராம்.
'கை'க்கு மாறும் கோலார்?
விவசாயி பெண் கட்சிக்காரர்களை கப்சிப்னு இருக்கணும்னு மாஜி பி.எம்., தொட்ட கவுடா, மாஜி சி.எம்., கு.அண்ணா, 'லாக்' செய்துட்டாங்களாம். பூ கூட்டணி பற்றி எதையும் விமர்சிக்க கூடாதென வாயை அடைச்சிட்டாங்களாம்.
பூ கூட்டணியில் புல்லுக்கட்டு வேணாம்னு பூ தரப்பில் கட்டாயப்படுத்துவதால் , புல்லுக்கட்டுகாரங்க கலக்கத்தில் இருக்காங்க. பூ கூட்டணியில், 5 கேட்டு 4 சீட் ஓகே செய்தால் 'கோலார்' தொகுதியில் புல்லுக்கட்டுப் பெண் கட்சி வெற்றி நடை போட முடியும்.
கூட்டணி ஏற்படாமல் போனால், கோலாரை புல்லுக்கட்டுகாரங்களும், காவிக்காரர்களும், கை காரர்களிடம் எம்.பி.,பதவியை, தாரை வார்க்க வேண்டியது தானாம்!
எந்த கூட்டணியில் நீலக் கொடி?
ஒரே ஒரு நகரத்தில, ஒரே ஒரு முனிசி., உறுப்பினர். அவரே இவரோட கட்சிக்கு தேசிய தலைவரு. இவங்க இண்டியா கூட்டணியில் இருக்காங்களா. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்காங்களா. இன்னும் அவங்க அறிவிக்கலயே.
கோல்டு சிட்டியில் இக்கட்சியோட பில்லர்கள், எந்த பக்கம் சாய்வதென தெரியாமல் திக்கு முக்காடுறாங்க. ஒருவேளை கோலார் லோக்., தொகுதியில் தனித்து போட்டியிடுவரா. எந்த முடிவாக இருந்தாலும், தலைவர் தான் தீர்மானிப்பாராம்.
இதுக்காக, இவங்க கட்சி சட்டப்பிதா பிறந்த மாநிலத்தில் செயற்குழு கூட்டமும் நடக்கலாமென சிலிக்கான் சிட்டியின் நீலக் கொடிக்காரர்கள் தெரிவிக்கிறாங்க. அசெம்பிளி தேர்தலில் உசுப்பேத்தியது போல மறுபடியும் லோக்சபா தேர்தலில் உசுப்பேத்துறாங்களோ. சும்மா ரணகளமாக்காமல் விட மாட்டார்களோ?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!