ADVERTISEMENT
நெலமங்களா: தேசிய நெடுஞ்சாலையில் திடீரென குறுக்கே வந்த எறுமை மீது, அரசு பஸ் மோதி பள்ளத்தில் பாய்ந்தது.
பெங்களூரில் இருந்து, நேற்று காலை 55 பயணியருடன் ஷிவமொகாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
தேசிய நெடுஞ்சாலை 4ல், நெலமங்களா தாபஸ்பேட் அருகே செல்லும் போது, திடீரென சாலையில் குறுக்கே எருமை வந்தது.
பஸ் மோதியதில் எருமை இறந்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நெலமங்களா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!