ADVERTISEMENT
தேவகோட்டை : திருமணவயல் உடையார் குடியிருப்பில் தியான மண்டபத்துடன் கூடிய மகா கணபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு முதல் நாள் காலை கணபதி ஹோமம் அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து அபிராமி அந்தாதி முற்றோதல் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் வள்ளி பாலகிருஷ்ணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நேற்று காலை சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மகாகணபதிக்கு சித்தி புத்தியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி விரத பூஜையும் பெண்கள் குத்துவிளக்கேற்றி விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
இலக்கியமேகம் சீனிவாசன் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். சாரதா ஆஸ்ரமம் சாரதப்பிரியா அம்பா வேதங்கள் சொல்லி விளக்கு பூஜையை நடத்தினார். மகா கணபதி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!