சர்க்கரை நோயை தடுக்க சிறு தானியத்தை பயன்படுத்தலாம்
காரைக்குடி, : சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சிறுதானிய உணவை பயன்படுத்த வேண்டும் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி செந்தில்குமரன் பேசினார்.
பிரம்பவயலில் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி குறித்த பயிற்சி நடந்தது. சாக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்முகஜெயந்தி தலைமையேற்று பேசினார்.
அதில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில திட்டங்கள் குறித்து விளக்கினார்.
விவசாயிகள் நெற்பயிருக்கு மாற்றாக கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, தினை போன்ற சிறுதானிய பயிர்களை நான்கில் ஒரு பகுதியிலாவது பயிரிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி செந்துார் குமரன் பேசினார். அதில், நம் சந்ததியினர் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதிக அரிசி உணவை உண்பதே சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக உள்ளது.
இதற்கு மாற்றாக சிறு தானியங்களை சாகுபடி செய்வதோடு நம் அன்றாட உணவிலும் சிறுதானியங்களை பயன்படுத்த வேண்டும். என்றார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலர் காஜா முகைதீன் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் கார்த்திக் குமரன், சோலை ராஜன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப பணியாளர் தமிழ்செல்வி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் லட்சுமி பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!