கருப்பாயூரணியில் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை கருப்பாயூரணியில் ஆவணங்கள்படி பாதையாக இருக்கும்பட்சத்தில் அங்குள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை ஆண்டார்கொட்டாரம் பாக்கியராஜ் தாக்கல் செய்த மனு:
நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்கு தொகுதி துணைச் செயலராக உள்ளேன். கருப்பாயூரணி மந்தை திடலில் அனைத்து கட்சி கொடிக் கம்பங்களும் உள்ளன. அங்கு மக்களுக்கு இடையூறின்றி விதிகளுக்குட்பட்டு எங்கள் கட்சியின் கொடிக் கம்பத்தை நிறுவ அனுமதிக்க கலெக்டர், கருப்பாயூரணி போலீசில் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு: பொதுப் பாதையாக உள்ள இடத்தில் கொடிக் கம்பம் நிறுவ மனுதாரர் அனுமதி கோருகிறார்.
மனுதாரர் தரப்பு: அப்பகுதியில் பிற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. மற்ற கட்சிகளைப்போல் அங்கு மனுதாரர் தரப்பில் நிறுவ அனுமதிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். ஆவணங்கள்படி பாதையாக இருக்கும்பட்சத்தில் அங்குள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!