Load Image
Advertisement

பிரதமரை சந்தித்த சுமலதா மாண்டியா மீண்டும் கிட்டுமா?

 Will Sumalatha Mandya meet the Prime Minister again?    பிரதமரை சந்தித்த சுமலதா மாண்டியா மீண்டும் கிட்டுமா?
ADVERTISEMENT
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மாண்டியாவில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுமலதா. இவரை எதிர்த்து போட்டியிட்ட ம.ஜ.த.,வை சேர்ந்த குமாரசாமியின் மகன் நிகில் கவுடா தோல்வியடைந்தார்.

அத்துடன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாண்டியா தொகுதிகளில் சுமலதா பிரசாரம் மேற்கொண்டார். இதனால் ம.ஜ.த.,வினர், சுமலதா மீது கோபத்தில் உள்ளனர். இத்தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் கட்சியினர் உள்ளனர்.

இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், புதுடில்லியில் இன்று பிரதமர் மோடியை, தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் சந்திக்க உள்ளனர்.

அப்போது, லோக்சபா தேர்தலில் மாண்டியா உட்பட குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்த சுமலதா, பிரதமர் மோடியை நேற்று முன்னதாகவே சந்தித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது, தனக்கு மாண்டியா தொகுதியை ஒதுக்கும்படி அவர் கோரியதாக தெரிகிறது.

இது குறித்து 'எக்ஸ்' எனும் சமூக வலைளத்தில், சுமலதா கூறியிருப்பதாவது:

பிரதமரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன், 'ஜி -- 20' உச்சி மாநாடு வெற்றிக்காகவும் வாழ்த்து தெரிவித்தேன்.

மாண்டியா தொகுதி உட்பட கர்நாடகாவின் பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, பிரதமர் மோடி பல ஆலோசனைகள் வழங்கினார்.

அதிக அழுத்தம், பிசியான வேலை இருந்தபோதும், எனக்கு நேரம் ஒதுக்கி, என்னை சந்தித்த அவருக்கு நன்றி.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



- நமது நிருபர் -


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement