ADVERTISEMENT
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த அடைமழையால் ரோடுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல்லில் நிலவிய கடும் வெப்பமானது நேற்று சற்று தணிந்த நிலையில் மதியம் 2:00 மணி முதல் கருமேகங்கள் சூழ்ந்தன. இதன் பின் மாலை 3:20 மணிக்கு பெய்ய துவங்கிய மழை விடாமல்இரண்டு மணி நேரம் தொடர்ந்தது.
ரோடெங்கும் தேங்கிய வெள்ளத்தால் வெளியில் செல்ல முடியாதபடி வாகனங்கள் மழைநீரில் நீந்தின. பல இடங்களில் பள்ளங்களில் தேங்கிய நீரால் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
குறிப்பாக திருச்சி ரோடு மேம்பால சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக, சகதிகள் நிறைந்து, மழைநீர் தேக்கத்தில் வாகன விபத்தை வரவேற்று காத்திருந்தது. என்.ஜி.ஓ., காலனி ரோடு கூட்டுறவு நகர் திருப்பத்திலும் மழைநீர் தேங்கியபடி ஆர்ப்பரித்தது.
அண்ணாநகர்,சுப்ரீம் நகர் பகுதிகளில் மேன்ேஹால்கள் திறந்தபடி கழிவு நீர் பீச்சியடித்து ரோட்டில் ஆறாக பாய்ந்து சென்றது. அந்த வழியாக செல்லவே விருப்பமின்றி பலர் 2 கி.மீ., துாரம் சுற்றி சென்றனர். நேற்று பெய்த அடைமழையால் பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் போக்குவரத்து போலீசார் நிறுத்தியிருந்த டூவீலர் பைக் மீது மரம் முறிந்து விழுந்தது. மாநகராட்சி ஊழியர்களின் பெருமுயற்சிக்கு பின் மீட்டெடுக்கப்பட்டது. மழைகாலம் துவங்குவதற்கு முன்பாக சிறிய மழைக்கே நெடுஞ்சாலை, ஊராட்சி, மின் துறை நிர்வாகங்கள் ஸ்தபித்தது. இனிவரும் அடைமழை காலங்களில் நகர், கிராமங்களின் நிலை என்னவாகுமோ என்ற பயத்தை மக்கள் மனதில் தாங்கியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!