டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: கடையை அகற்ற முடிவு
திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் அருகே வெளியாத்தூரில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்காம் நாளாக மக்கள் போராடிய நிலையில் அதிகாரிகள் கடையை திறப்பதில்லை என்று அறிவித்ததால் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
வெளியாத்தூரில் விவசாய பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்தது.
விவசாயப்பணிகளில் பெண்கள் பணியாற்றுவது பாதிக்கும் என்று கருதிய சுற்று வட்டார பெண்கள், மா.கம்யூ., மற்றும் விவசாய சங்கத்தினருடன் இணைந்து கடைக்கு முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மோகன் ,மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
நான்காவது நாளில் நேற்று தாசில்தார் வெங்கடேசன், டி.எஸ்.பி., ஆத்மநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் கடையை திறப்பதில்லை, இரு நாட்களில் மதுபானங்களை எடுத்துச்செல்வது என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தை நிறுத்தி விட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!