நாளை மின் குறை தீர்க்கும் கூட்டம்
மதுரை : மதுரை மின்வாரியம் தெற்கு கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தலைமையில் நாளை (செப்.,21) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின்குறைதீர் நாள் கூட்டம் சுப்ரமணியபுரம் மின் அலுவலகத்தில் நடக்கிறது.
சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோயில், மாகாளிப்பட்டி, மகால், அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமோ தெரிவிக்கலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!