பஸ் ஸ்டாண்ட் அருகில் பாராக செயல்படும் கடை
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகில் மதுபான பாராக பெட்டிக்கடை செயல்பட்டு வருகிறது. இதில் மதுபிரியர்கள் மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. ஆனால் பார்வசதி இல்லை. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு கடையில் மது அருந்துவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று இரண்டு காவலர்கள் சீருடையில் மூடி இருந்த கடைக்குள் இருந்து வெளியே வந்து டூவீலரில் செல்லும் காட்சி வைரலானது.
அவர்கள் கடையில் சோதனை செய்தார்களா என்பதும் தெரியவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!