விபத்தை காண வந்தவர் ஆம்புலன்ஸ் மோதி பலி
வடமதுரை, : தாமரைப்பாடி அருகே விபத்தை காண வந்த கல்லாத்துப்பட்டி கண்ணன் 80 ,மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பலியானார்.
திண்டுக்கல் அருகே நீலமலைக்கோட்டை குமாரபாளையத்தை சேர்ந்தவர்கள் லோகநாதன் 42, கிருஷ்ணன் 42 . டூவீலரில் தாமரைப்பாடி பஸ் ஸ்டாப் அருகில் நேற்றுமுன்தினம் மாலை சென்றபோது நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தனர். அப்பகுதியினர் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.
காயமடைந்த இருவரையும் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்சை திருப்ப பின்னோக்கி இயக்கிய போது வேடிக்கை பார்த்த கல்லாத்துப்பட்டி கண்ணன் 80 ,மீது மோதியது. இதை தொடர்ந்து கண்ணனையும் அதே ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணன் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!