கால்பந்தாட்ட போட்டி
காரைக்குடி : கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. தொடக்க விழாவில் செயலர் நாராயண தேசிக சுவாமி வாழ்த்தினார். கல்லூரி தாளாளர் வீரப்பன் பேசினார். கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையேற்றார். கோவிலுார் ஆண்டவர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு அறிவியல் கல்லூரி முதல்வர் ரவீந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் பேவின்சன் பேரின்பராஜ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பேராசிரியர் ராஜ இசக்கீஸ்வரி தொகுத்து வழங்கினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!