ADVERTISEMENT
மதுரை :மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் அதற்கான காரணம் அறியவும், மேல்முறையீடு செய்யவும் மதுரையில் தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் குவிந்தனர்.
அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம், செப்.,15 முதல் தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் தகுதியானவர்கள் யார் என்ற விபரம் மாவட்ட நிர்வாகத்திற்கே இன்னும் வரவில்லை. இத்திட்டம் ஆன்லைனில் நடப்பதால் பயனாளிகள் விபரம் மாநில அதிகாரிகளிடமே உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விண்ணப்பித்து உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் முறையீடு செய்ய தாலுகா, ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகங்களில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, நேற்று முதல் மனுக்களை பெற ஆரம்பித்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர். மேல்முறையீடு செய்ய விரும்புவோர் ஆர்.டி.ஓ.,விடமோ, நகர்ப்புறம் எனில் மாநகராட்சி உதவி கமிஷனரிடமோ மனு செய்யலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!