ADVERTISEMENT
சிவகங்கை : சிவகங்கையின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க தெப்பக்குளத்தின் வரத்துக்கால்வாயை துார்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மையப்பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மைய பகுதியில் கிணறும் உள்ளது. இந்த கிணற்றிலிருந்துஅரண்மனை நீச்சல் குளத்திற்கு தண்ணீர் சென்றுள்ளது. தெப்பக்குளம் கட்டும் போதே தண்ணீர் வருவதற்குஏதுவாக வரத்து கால்வாய்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரைவரத்து கால்வாய் மூலம் தெப்பக்குளத்தை நிரப்பி வந்தனர்.
தெப்பக்குளம் நிரம்பினால் சிவகங்கை நகரில் நிலத்தடிநீர்மட்டம் உயரும். இந்த தெப்பக்குளத்தை தற்போது நகராட்சி பராமரித்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டுதெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு அமைச்சர் தா.கிருஷ்ணன் முயற்சியில் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர்கொண்டு வந்து தெப்பக்குளத்தை நிரப்பினர். பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியில்மீண்டும் கால்வாய்கள் அனைத்தும் துார்வாரப்பட்டது.
அதன் பின் தொடர்ந்து தெப்பக்குளத்திற்கு தற்போது எப்போதும் போல் நீர் உள்ளது.ஆனால் தெப்பக்குளத்திற்கு வரக்கூடிய வரத்துக்கால்வாய் அனைத்தும் சேதமடைந்து முட்செடிகள்முளைத்து அடைபட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வரக்கூடிய வரத்து கால்வாய் முழுவதும்செடிகள் முளைத்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலம் துவங்கி உள்ள நிலையில் வரத்து கால்வாயைதுார்வார வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!