பெங்களூரில் விதிமுறை மீறிய பப்கள் மீது 2,431 வழக்குகள்
பெங்களூரு : பெங்களூரில் மதுபானம், குட்கா சட்ட விதிகளை மீறியதாக, பப்கள், டிஸ்கொதேக்கள், ஹுக்கா பார்கள் மீது 2,431 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு நகரில் உள்ள பப்கள், டிஸ்கொதே, பார்கள், சட்டத்தை மீறி, மது, புகை விற்பனை செய்து வருகின்றன. இதுதவிர, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை மற்றும் மதுபானம் விற்பது குறித்து போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, நகரில் கடந்த இரண்டு நாட்களாக, 633 இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, 131 பப்கள், டிஸ்கொதே, ஹுக்கா பார்களில் விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது.
விதிமுறைப்படி, பொது இடங்கள், 30 அறைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்கள், 30 பேர் அமரக்கூடிய உணவகங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறியதாக, விதிமீறிய பப்கள் மீது 2,431 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!