Load Image
Advertisement

தேனியில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

 Ganesha Chaturthi Procession held in Theni with grandeur, celebration at Gampam, Bodi      தேனியில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
ADVERTISEMENT


தேனி : தேனியில் ஹிந்து எழுச்சி முன்னணி, ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை விநாயகர் சிலைகள் விஜர்ஸன ஊர்வலம் ஹிந்து எழுச்சி முன்னணியினரால் நடத்தினர். ஊர்வலத்தில் தேனி, அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, வடபுதுப்பட்டி, அன்னஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 85 விநாயகர் சிலைகள் வாகனங்களில் அணிவகுத்து வந்தன. ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். பொம்மைய கவுண்டன்பட்டியில் துவங்கிய ஊர்வலம் தேனி மதுரை ரோடு வழியாக அரண்மனைப்புதார் ஆற்றுப்பாலம் அருகில் சிலைகள் முல்லை பெரியாற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் வேதபுரீ சித்பவானந்த ஆசிரம குரு கிருபானந்த சுவாமி, ரிஷிகேஸ் ரகுவீரானந்தா சுவாமி, இயக்க நிறுவனர் பொன்ரவி, மாவட்ட தலைவர் ராமராஜ், செயலாளர் ராமமூர்த்தி, அமைப்பாளர் கோவிந்த ராஜ், பொருளாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகர தலைவர் செல்வப்பாண்டி உள்ளிட்டடோர் செய்திருந்தனர்.

தேனியில் மாலை ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்து விஜர்ஸன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் தேனி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 60 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், செயலாளர் உமையராஜன், துணைத்தலைவர் திலகர், நகரத்தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் ராம்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் வீரபாண்டி, முத்துத்தேவன்பட்டி, காமராஜபுரம், கூளையனுார், கோட்டூர், தர்மாபுரி, பூமலைக்குண்டு, மல்லையகவுண்டன்பட்டி, காட்டுநாயக்கன்பட்டி, தாடிச்சேரி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 32 சிலைகள் கரைக்கப்பட்டன.

* கம்பம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஊரிலும் வீதிக்கு வீதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை கம்பத்தில் மெயின்ரோடு அரச மரம் அருகில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது. டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு, வ. உ.சி. திடல், மெயின்ரோடு, நகராட்சி வீதி, நாட்டுக்கல், வடக்கு பட்டி வழியாக முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சசிக்குமார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. ஹிந்து எழுச்சி முன்னணியினரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினார்கள்.

* உத்தமபாளையத்தில் ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா தலைமையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மெயின்ரோடு, வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி வழியாக முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

* கூடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இந்நிலையில் 32 சிலைகளையும் வாகனங்களில் ஏற்றிச் சென்ற ஊர்வலத்தை ஹிந்து முன்னணி நகரப் பொதுச் செயலாளர் ஜெகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் துவக்கி வைத்தார். புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ரத வீதிகள், மெயின் ரோடு வழியாக காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் ஊர்வலம் நடத்த போலீசார் அதிக அளவில் குறிக்கப்பட்டிருந்தனர்.

* போடி நகராட்சி, பி.தர்மத்துப்பட்டி, ரங்கநாதபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட 80 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் பரமசிவன் கோவில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜையபாண்டியன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது.

இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் தண்டபாணி, போடி நகர தலைவர் சந்திரசேகர், நகர பொதுச் செயலாளர் தெய்வம், நகராட்சி கவுன்சிலர்கள் மணிகண்டன், சித்திராதேவி, ஒன்றிய தலைவர் சஞ்சீவ் கணேசன், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் பூங்கொடி, இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன், விநாயகர் சதுர்த்தி ஊர்வல விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், இந்து முன்னணி, பா.ஜ., நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் போடி பஸ்ஸ்டாண்டில் துவங்கி வேட்ட கருப்பசாமி கோயில் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றில் கரைக்கப்பட்டன. போடி டி.எஸ்.பி., பெரியசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement