இன்றைய நிகழ்ச்சி /செப்.20 க்குரியது.
கோயில்
புரட்டாசி பெருந்திருவிழா 4ம் நாள் -கஜேந்திர மோட்சம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 8:30 மணி, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளல், மாலை 4:00மணி.
துர்க்கை தேவிக்கு ராகுகால பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா ரோடு, எல்லீஸ்நகர், மதுரை, மதியம் 3:00 மணி.
அனுஷ விழா, மகா பெரியவர் விக்ரகத்திற்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு பூஜை மாலை 5:00 மணி, குரு மகிமை என்ற தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் சொற்பொழிவு மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்: நிகழ்த்துபவர் -- துளசி பிருந்தா, வேதாந்த சிரவணானந்த மடாலயம், 4சி, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு: பேசுபவர் மதுரை காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், எஸ்.வி.என்., கல்வியியல் கல்லூரி, மதுரை, காலை 10:00 மணி.
காஞ்சி ஸ்ரீமகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு அனுஷம் வைபவ அபிஷேகம், ஆராதனை: ஸ்ரீமஹா பெரியவா கோவில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், மதுரை, மாலை 5:30 மணி.
பள்ளி கல்லுாரி
அறிவியலின் சமீபத்திய போக்கும், நானோ தொழில்நுட்பமும் குறித்த கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, பங்கேற்பு: கல்லுாரி உதவி செயலாளர் சொக்கலிங்கம், முதல்வர் விசுமதி, சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சசிகாந்த், வேலம்மாள் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ராஜேஷ், காலை 10:30 மணி.
என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுக்கான திட்ட நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ரவீந்திரன், செயலாளர் குமரேஷ், ஏற்பாடு:என்.எஸ்.எஸ்., உள் தரக் காப்பீட்டு குழு, காலை 11:00 மணி.
தொழில்நுட்ப கருத்தரங்கம்: கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ஆனந்தன், ஏற்பாடு: மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில், காலை 10:00 மணி.
உலக சுற்றுலா தின விழா: அல்அமீன் மேல்நிலைப் பள்ளி, புதுார், மதுரை, ஒருங்கிணைப்பாளர்கள் ரிஸ்வந்த், முஸ்தபா, காலை 10:00 மணி.
பொது
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் ஊர்வலம்: விளக்குத்துாண், மதுரை, பங்கேற்பு: மாநில பொதுச்செயலாளர் கிேஷார், மாவட்ட தலைவர் அழகர்சாமி, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:00 மணி.
தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா: கருணாநிதி திடல், மேலுார், தலைமை: வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: அமைச்சர் உதயநிதி, காலை10:00 மணி.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: கருணாநிதி திடல், மஸ்தான்பட்டி, திறந்து வைப்பவர் அமைச்சர் உதயநிதி, மாலை 4:00 மணி.
தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்: விரகனுார், மதுரை, தலைமை: செயலாளர்கள் மூர்த்தி, தளபதி, மணிமாறன், பங்கேற்பு: அமைச்சர் உதயநிதி, ஏற்பாடு: ஒருங்கிணைந்த தி.மு.க., மாவட்டம் மாலை 4:30 மணி.
தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, காலை 1:00 மணி, மதியம் 4:00 மணி, இரவு 7:00 மணி.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க கிளை 10வது ஆண்டு பேரவை கூட்டம்: தருமபுரம் ஆதின மடம், வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் கோதண்டராமன், சிறப்பு விருந்தினர்: மண்டல தலைமை பொறியாளர் (பொறுப்பு) நடராஜன், காலை 9:00 மணி.
விளையாட்டு
மதுரை காமராஜ் பல்கலை மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் பிரிவு ேஹண்ட் பால் போட்டி: பாத்திமா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மதுரை காமராஜ் பல்கலை, காலை 8:30 மணி.
எம்.டி.எப்.ஏ., இன்டர் அகாடமி கால்பந்து லீக் போட்டி, ரேஸ்கோர்ஸ், மதுரை, காலை 8:00 மணி, ஏற்பாடு மதுரை மாவட்ட கால்பந்து சங்கம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!