சுய உதவிக் குழுவுக்கு வேளாண் இயந்திரங்கள்
நத்தம் : நத்தம் சிறுகுடியில் தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார இயக்கம், வேளாண் பொறியியல் துறை சார்பாக மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சரவணன் ரூ.6.51 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை வழங்கினார்.
வங்கி மேலாளர் புஷ்கலா, மாவட்ட வள பயிற்றுனர் குமார், வட்டார மேலாளர் விஜயலட்சுமி, கலைச்செல்வி கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!