திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கெட்டுப்போன கோழி இறைச்சியால் தயார் செய்யப்பட்ட 15 கிலோ ஷவர்மாவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து,4 கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் நகரில் மக்களுக்கு விற்கப்படும் ஷவர்மா எனும் உணவில் கெட்டுப்போன கோழி இறைச்சிகளை பயன்படுத்துகிறார்களா என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி,பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரவுண்ட்ரோடு,சிலுவத்துார்ரோடு,ஏ.எம்.சி.,ரோடு,பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஷவர்மா விற்கப்படும் 12 கடைகளில் நடந்த ஆய்வில் 2 கடைகளில் 15 கிலோ எடை கொண்ட கெட்டுப்போன கோழி இறைச்சி,5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளில் சுகாதாரமில்லாமல் உணவு பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்தது என 4 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் என ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற கெட்டுப்போன உணவு பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (2)
மிச்சம்...அடிக்கடி வெளியில் வாங்கி தின்னும் பழக்கம் நிற்கும் வரை இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்க தான் செய்யும்..குறைந்த விலையில் kettu pogum நிலையில் கறியை வாங்கு சாயம் பூசி விற்று காசு பார்க்கலாம் ngra பேராசை.. மனித உயிர் மேல் கவனம் இல்லை காசு மட்டும் தான்மக்களுக்கு தான் புரிய வேண்டும். நான் pure non veg வெளிய saapidum நிலை வந்த இட்லி அல்லது plain தோசை தவிர வேர எதுவும் thoda மாட்டேன்.Oru shawarma 80 rs average price. Oru family saapita rs 500 காலி cool drinks ellan sethu.. அந்த 500 rs ku fresh chichen வாங்குன குடும்பம் lunch ku திருப்தி aa saapitu மிச்சம் night dinner ku manage panni வெறும் kuzhambai அடுத்த நாள் காலை இட்லி ku தொட்டு saapidum போடு kidaikum சுவை எந்த shawarma la kidaika poguthu..Veetu பெண் manigale உங்கள் பிள்ளைகள் arokiyam முக்கியம் veetu தலைவர்களே உங்கள் குடும்ப arokiyam முக்கியம்
சுவர்மா குறைந்த சூட்டில் மெதுவாக சமைக்கப்பட்டு பல நாட்களுக்கு குறைந்த சூட்டிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதால் இ-கோலை என்ற உயிர்க்கொல்லி கிருமி உண்டாக நிறைய வாய்ப்புகள் உண்டு. சுவர்மாவை சாப்பிடாதிருத்தலே உடலுக்கு நன்று.