நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
மதுரை : மதுரை மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் வகையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் பழைய பொருட்களை அடைத்து வைப்பது, தண்ணீர் தேங்கி கிடப்பதை தடுக்கும் வகையில் நிறுவனங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டது.
மாநகராட்சி அலுவலர்கள் பைகாரா பகுதியில் ஆய்வு செய்தனர். மாநகராட்சி வழிகாட்டுதலை பின்பற்றாமல் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்ட பழங்காநத்தம் வணிக நிறுவனம், ஒர்க் ஷாப் ஆகியவற்றிற்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!