ADVERTISEMENT
மதுரை : மதுரை மத்திய சிறையில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் 30 பெண்கள் உட்பட 77 கைதிகளுக்கு அடிப்படை கல்வி கற்றுத்தரும் வகுப்பு நேற்று(செப்.,19) துவங்கியது.
பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு திட்டமான இதை தமிழக சிறைகளில் செயல்படுத்த அத்துறை டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார்.
9 மத்திய சிறைகள், புதுக்கோட்டை மாவட்ட சிறைகளில் உள்ள எழுதப் படிக்க தெரியாத 1249 கைதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 6 மாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு எழுத்தறிவு கல்வி திட்டம் மூலம் எண்ணும் எழுத்தும் கற்கும் வகையில் சிறைத்துறை மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் பாடநுால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 20 கைதிகளுக்கு தலா ஒரு ஆசிரியர் கற்றுத்தருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் நேற்று இத்திட்டம் துவக்கப்பட்டது. டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். 30 பெண்கள் உட்பட 77 கைதிகள் கற்க ஆரம்பித்துள்ளனர்.
பயிற்சி முடிவில் கல்வித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!