350 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் : ரூ.12 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் கடைகளில் பொது மக்கள் விநியோகத்திற்காக பதுக்கியிருந்த 30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவில் நகர் நல அலுவலர் செபாஸ்டின்,சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,செல்வராணி உள்ளிட்ட அதிகாரிகள் கிழக்கு ரதவீதி,மேற்கு ரதவீதி பகுதிகளில் செயல்படும் கடைகள், தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். 3 கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கப்பட்டிருந்த 350 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!